×

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு சார்பதிவாளர் வீட்டில் ரெய்டு

வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றும் ரமணன் என்பவர் கடந்த 2018ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தனது பெயரிலும், மனைவி சவுந்தரம் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக 82 சதவீதம் அளவுக்கு, அதாவது ரூ.47 லட்சத்து 49 ஆயிரத்து 74 மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குவித்து வைத்திருப்பது தெரியவந்தது. எனவே விஜிலென்ஸ் போலீசார் ரமணன் மற்றும் அவரது மனைவி மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று மதியம் 1 மணி முதல் காட்பாடி மதி நகரில் உள்ள சார் பதிவாளர் ரமணனின் வீட்டில் வேலூர் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் திடீரென சோதனை நடத்தினர். இதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததற்கான வங்கி கணக்கு விவரங்கள், வீட்டுமனை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

The post வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு சார்பதிவாளர் வீட்டில் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Ramanan ,Vellore District ,KV Kuppam Sub ,Registrar ,Soundaram ,Dinakaran ,
× RELATED உரங்களில் கலப்படம் செய்தால் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை