×

கோவை டெக்னோடேக்கிள் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

ஈரோடு, பிப்.14: பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மற்றும் கோவை டெக்னோடேக்கிள் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் படிக்கும் இளம் மாணவ கண்டு பிடிப்பாளர்களுக்கு நிகழ் நேர பயிற்சிகளை வழங்குவதற்காக வளாகத்திற்குள் ஒருசுற்றுச்சூழலை உருவாக்க கல்லூரி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக கோயம்புத்தூரில் உள்ள டெக்னோடேக்கிள் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமானது மாணவர்களை நேரடி திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதிப்பதாகும். இது மாணவர்களை கல்லூரி சூழலில் இருந்து தொழில்முறை பணிச் சூழலுக்குஎளிமையான வகையில் முன்னேற வழிவகுக்கும். கோயம்புத்தூர் டெக்னோடேக்கிள் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஆர்.பாலவிஷ்ணு மற்றும் கல்லூரி முதல்வர் வி.பாலுசாமி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில் டெக்னோடேக்கிள் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸின் பங்குதாரர்களான எம்.பி. மதுமிதா மற்றும் பழனியப்பன் கல்லூரி ஐஐபிசியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் பி.சத்தியமூர்த்தி ஐடி துறைத்தலைவர் எஸ்.ஆனந்தமுருகன் மற்றும் பேராசிரியர் ஆர்.தங்கராஜன் உள்ளிட்ட துறைப்பேராசிரியர்கள்உடன் இருந்தனர்.

The post கோவை டெக்னோடேக்கிள் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Technotackle Software Solutions ,Perundurai Kongu College of Engineering ,Erode ,Perundurai Kongu Engineering College ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...