×

வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் தலைமையில் உயர்மட்ட குழுக் கூட்டம்

 

ஈரோடு, பிப். 14: ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான உயர்மட்ட குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,

தமிழ்நாடு மின்சார வாரியம், கல்வித் துறை, காவல்துறை, கூட்டுறவுத் துறை, பொதுப்பணித் துறை, வேளாண்மை – உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, ஈரோடு விற்பனைக் குழு, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கால்நடை பராமரிப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளையும் துரிதப்படுத்தி விரைவில் முடித்திடுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, வருவாய் கோட்டாட்சியர்கள் சதீஷ்குமார், திவ்யபிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் உமாசங்கர் உள்ளிட்ட அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் தலைமையில் உயர்மட்ட குழுக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Collector ,Erode ,Erode district ,Rajagopal Sunkara ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...