×

கர்ப்பிணிக்கு கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய்; சென்சார் கண்காணிப்பு சேவையால் இரட்டைக் குழந்தை: காவேரி மருத்துவமனை சாதனை

சென்னை: காவேரி மருத்துவமனை கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் கொண்ட பெண்ணிற்கு சென்சார் கண்காணிப்பு சேவை வழங்கியதால், ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. 26 வயதுப் பெண் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பதாகக் கண்டறியப்பட்ட அந்தப் பெண்னின் நிலை, கர்ப்ப காலத்தில் சிஜிஎம்எஸ்(தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு ஆய்வு) தாய் ஆக உருப்பெற்றார். தீவிர கண்காணிப்பு தேவைப்பட்ட அந்தப்பெண், தனது கர்ப்ப காலத்தின் 26வது வாரத்தில் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். பரிசோதனைக்கு பிறகு, அவரது உணவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய சர்க்கரை அளவுகள் ஆபத்தான உயர்
நிலையில் 200க்கும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. நாள்முழுவதும் அவரது சர்க்கரை நிலைகளை மருத்துவக் குழு தீவிரமாக கண்காணித்தனர்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவக் குழு, அப்பெண்ணின் உயர் சர்க்கரை அளவுகளால் ஏற்படும் சவால்களை குழு நிவர்த்தி செய்தது. தொடர்ச்சியான கண்காணிப்புடன் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டையும் சேர்த்துப் பின்பற்றியதன் மூலம், அப்பெண்ணின் உணவுக்கு முந்திய சர்க்கரை அளவுகள் குறிப்பிடத்தக்க வகையில் கட்டுக்குள் இருந்தது. அதைத் தொடர்ந்து, உணவுக்குப் பிந்திய சர்க்கரை அளவுகளும் 14 நாட்களுக்குள் இயல்பான அளவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதனால் ஆரம்ப கட்டத்தில் 32வது வாரத்தில் சிசேரியன் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தவருக்கு, துல்லியமான நிகழ்நேர சென்சார் கண்காணிப்பு சேவை மற்றும் நீடித்த நீரிழிவு அளவுகள் மூலம் 35வது வாரத்திற்கு கர்ப்பம் பாதுகாப்பாக நீட்டிக்கப்பட்டது. அந்தப்பெண், பிரசவத்திற்குப் பிறகு, பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டிய தேவையின்றி ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
இது தொடர்பாக காவேரி மருத்துவமனை நீரிழிவு மருத்துவர் பரணீதரன் கூறியதாவது:

நிகழ்நேர சென்சார் கண்காணிப்பை பயன்படுத்துவது, கர்ப்பகால நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் ஒரு முக்கியத் திருப்பமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தாய் மற்றும் குழந்தை இருவருக்குமான சிறந்த விளைவுகளைப் பெற, நிகழ்நேர சரிசெய்தல்களை வழங்குகிறது. சென்சார் கண்காணிப்பு என்பது தனிநபர் ஒருவருக்கு ஒதுக்கப்பட்டு, சர்க்கரை அளவுகள் நாள் முழுவதும் வெவ்வேறு காலகட்டங்களில் கண்காணிக்கப்படும். இது குழுவால் முற்றிலும் தொலைநிலையில் இருந்து, மற்றும் வழக்கமான மறுசீராய்வுகளுடன் நிர்வகிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கர்ப்பிணிக்கு கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய்; சென்சார் கண்காணிப்பு சேவையால் இரட்டைக் குழந்தை: காவேரி மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.

Tags : Kaveri Hospital ,CHENNAI ,Censor Monitoring Service ,Cauvery Hospital ,Dinakaran ,
× RELATED காவேரி மருத்துவமனையில் அறுவை...