×

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: போலீசார் விசாரணை

பொன்னேரி: பொன்னேரி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை நடந்துள்ளது. ஆவடி காவல் சரகம் பொன்னேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஏலியம்பேடு கிராமத்தில் வசிப்பவர் நாராயணன் (45). பெயின்டரான இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.

இவரது மகள் மேனகா கல்லூரிக்குச் சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீடு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கடந்தன. பீரோவில் இருந்த 3 சவரன் தங்க நகைகள், ரூ.6 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து நாராயணன் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Narayanan ,Eliyambedu ,Ponneri police station ,Avadi police department ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்