×
Saravana Stores

ராம்சீதா பழத்தின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

*மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளை தாயகமாகக்கொண்ட இப்பழம் இன்று இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தைவான், ஆப்பிரிக்கா நாடுகளில் பயிராகிறது.

*எட்டு மீட்டர் முதல் பத்து மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. மஞ்சள் கலந்த பசுமை நிறப் பூக்கள் காணப்படும்.

*பழமானது மஞ்சள் சாயையுள்ள சிவப்பு நிறமாக, இதய வடிவத்துடன், 7.5 முதல் 12.5. செ.மீ. விட்டத்துடன் இருக்கும். பழச்சதை வெண்மை நிறமுடையது. பழச்சதையில் பல விதைகள் இருக்கும்.

*ஒரு பழம் சுமார் அரைகிலோ எடை கொண்டதாக இருக்கும்.

*ஒரு மரத்தில் 45 கிலோ பழங்கள் ஒரு ஆண்டில் கிடைக்கும். நட்ட இரண்டு ஆண்டுகளில் பழங்களை அறுவடை செய்யலாம்.

*ராம்சீதா பழத்தின் தாவரவியல் பெயர் அனோனா ரெடிகுலேட்டா என்பதாகும். இது அனோனசியே என்ற தாவரக் குடும்பத்தின் கீழ் வருகிறது.

மருத்துவக் குணங்கள்:

*ராம்சீதா பழத்தில் தாதுச்சத்துகள், கொழுப்பு, நார், மாவுப் பொருட்கள் உள்ளன. பழத்தில் அயோடின், புளோபின் உள்ளன. பழம் பழுக்கும் போது அஸ்கார்பிக் அமிலம் அதிகமாகிறது.

*காய், கனி, இலை, பட்டை அனைத்தும் மருத்துவக் குணங்கள் கொண்டது.

*பச்சைக்காயில் அதிக அளவு டானின் சத்து இருப்பதால் வயிற்றுப் போக்கிற்கு மருந்தாகிறது.

*சீதா காயானது மண்ணீரல் வீக்கத்தை தணிக்கும்.பழத்தை அடிக்கடி உண்டு வந்தால் ரத்த விருத்தி ஏற்படும்.

*இப்பழம் வாந்தியை நிறுத்தும்.

*இப்பழத்திற்கு பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு.

*இதயத்தை நன்கு செயல்பட வைக்கும்.

*காய்ச்சலின் போது ஏற்படும், தாகம், களைப்பை நீக்கும்.

*இப்பழம் உண்டு வர பசியைத் தூண்டும்.

*இலைகளை அரைத்து வயிற்றின் மேல் பூசிட அஜீரணம் மாறும்.

*பட்டையில் கசாயம் வைத்து பருக வயிற்றுப்போக்கை நிறுத்தும்.

*காயானது குடலிலுள்ள நாக்குப் பூச்சிகளை அழிக்கும்.

*இந்த ராம் சீதாபழத்தின் முற்றாத கனியிலிருந்து பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் கறுப்புச் சாயம் எடுக்கப்படுகிறது.

*விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்பு தயாரிக்க பயன்படுகிறது.

*இலைகள் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது.

தொகுப்பு: சா.அனந்தகுமார்

The post ராம்சீதா பழத்தின் நன்மைகள்! appeared first on Dinakaran.

Tags : Central America ,Caribbean ,India ,Pakistan ,Australia ,Taiwan ,Africa ,
× RELATED ஹைதி மீது ஆயுத தடை மேலும் கடுமையானது: ஐநா தீர்மானம் நிறைவேற்றம்