×

திருவள்ளூர் அருகே மின்சார ரயிலில் திடீர் தீ: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மின்சார ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அனைவரும் இறங்கி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று காலை மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது.

அரக்கோணம் வழியாக திருவள்ளூர் நோக்கி செஞ்சிபனம்பாக்கம்- கடம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு இடையே வந்தபோது ரயிலின் பிரேக்கிங் சிஸ்டம் கோளாறு காரணமாக பேட்டரியில் இருந்து புகை கிளம்பியது. இதன்காரணமாக ரயில் பாதிவழியிலேயே நிறுத்தப்பட்டது. மின்சார ரயிலின் பேட்டரியில் இருந்து கரும்புகை வந்துகொண்டிருந்த நிலையில் திடீரென ரயில் பெட்டி தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், ரயில் பெட்டியில் இருந்து இறங்கி ஓடியதால் பரபரப்பு நிலவியது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் விரைந்தனர். பின்னர் தீயை அணைத்து ரயில் பெட்டியை சீரமைத்தனர். இதன்காரணமாக இன்று காலை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு, தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றவர்கள் நடுவழியில் தவித்தனர். இதன்பிறகு 30 நிமிடத்திற்கு பிறகு புறப்பட்டு கடம்பத்தூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து மீண்டும் ரயிலை இயக்க வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து ரயில் டிரைவர் சோதனை செய்துவிட்டு அங்கிருந்து மீண்டும் 20 நிமிடம் தாமதமாக ரயில் இயக்கப்பட்டு திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.

இதன்பின்னர் அங்கிருந்து பயணிகள் அனைவரும் மற்ற ரயில்களில் ஏறி சென்னை உள்பட பல பகுதிகளுக்கு ன்றனர்.

The post திருவள்ளூர் அருகே மின்சார ரயிலில் திடீர் தீ: பயணிகள் அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Vellore Cantonment railway ,Chennai beach ,ARAKKONAM ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...