×

குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு நடன அணிகலனான கெடேச மாலைகளை காணிக்கை அளித்த பாலக்காடு பக்தர்

பாலக்காடு : குருவாயூர் கிருஷ்ணன் நடனத்திற்கு முக்கிய அணிகலன்களில் ஒன்றாக கெடேசமாலைகள் பாலக்காட்டைச் சேர்ந்த வைத்யநாதன் என்ற பக்தர் கோவிலுக்கு காணிக்கைச் செலுத்தி வழிப்பட்டார். தேவஸ்தான சேர்மன் டாக்டர். வி.கே.விஜயன் கெடேசமாலைகள் பக்தர் வைத்நாதனிடம் பெற்றுக்கொண்டார்.

கோவில் கொடிமரத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவஸ்தான நிர்வாகக்குழு உறுப்பினர்களான மனோஜ், ரவீந்தரன், மனோஜ்குமார், கலாநிலையம் கண்காணிப்பாளர் முரளி, நடனக்குழு தலைவர் சேதுமாதன்குட்டி, ஆசான் ராஜூ, வேணுகோபால, சுகுமாரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

கிருஷ்ணன் ஆட்டத்தில் முக்கியமாக அணியப்படுகின்ற அணிகலன்களில் ஒன்றான கெடேசமாலையாகும்.
கலாநிலைய கண்காணிப்பாளர் முரளி, கோவில் மேலாளர் சுரேஷ், வேணுகோபால் ஆகியோர் உட்பட பக்தர்களும் கெடேசமாலைகளை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். மூலவர் கால்பாதங்களில் வைத்து பூஜிப்பட்ட மாலைகளை பக்தர்கள் பார்வைக்கும் வைக்கப்பட்டிருந்தன.

The post குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு நடன அணிகலனான கெடேச மாலைகளை காணிக்கை அளித்த பாலக்காடு பக்தர் appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Guruvayur Krishna Temple ,Guruvayur ,Vaidyanathan ,Devasthanam ,Dr. ,VK Vijayan ,Vaidnathan ,Guruvayur Krishnan Temple ,
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்