×

குண்டாசில் வாலிபர் கைது

அம்பை,பிப்.13: அம்பாசமுத்திரம் கோவில்குளம் பிள்ளையார் கோவில் சன்னதி தெருவை சேர்ந்த மாரியப்பனின் மகன் சுப்பிரமணியன் என்ற ஒயிட் மணி (26). ஒருசில வழக்குகளில் கைதான இவர் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும் இவர் மீது அடிதடி, கொலை முயற்சி, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என அம்பை இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், எஸ்பி சிலம்பரசன் ஆகியோர் நெல்லை கலெக்டரிடம் பரிந்துரைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் இதற்கான உத்தரவை பரிந்துரைத்தார். அதன்பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சுப்பிரமணியன் (எ) ஒயிட் மணி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post குண்டாசில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kundazi ,Ambai ,Subramanian ,Mariyappan ,Ambasamudram Kovilkulam Pilliyar Temple Sannathy Street ,Central ,Gundasil ,Dinakaran ,
× RELATED முதியவரை ஏடிஎம்மில் ஏமாற்றிய தொழிலாளி குண்டாசில் கைது