புதுடெல்லி: ‘முந்தைய அரசின் 10 ஆண்டுகளில் வழங்கப்பட்டதை விட 1.5 மடங்கு அதிக வேலைகளை பாஜ அரசு வழங்கியுள்ளது’ என பிரதமர் மோடி பேசினார். ரோஸ்கர் மேளா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று பங்கேற்று, ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக நியமிக்கப்பட்ட 1 லட்சம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கி பேசியதாவது: ஒன்றியத்தில் இருந்த முந்தைய அரசு பணி நியமனங்களை செய்வதில் அதிக காலம் எடுத்துக் கொண்டது. இது லஞ்சத்திற்கு வழிவகுத்தது. இதில் தற்போதைய அரசு வெளிப்படைத் தன்மையை கொண்டு வந்துள்ள. முந்தைய அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் வழங்கியதை விட, ஒன்றிய பாஜ ஆட்சியில் 1.5 மடங்கு அதிக வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சிடைந்து வருகிறது. ரயில்வேயில் முந்தைய அரசுகள் உரிய கவனம் செலுத்தவில்லை. சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை அவர்கள் புறக்கணித்தனர். தற்போது ஒட்டுமொத்த துறையும் மாறி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
The post முந்தைய 10 ஆண்டு ஆட்சியை விட 1.5 மடங்கு அதிக வேலைகளை ஒன்றிய பாஜ அரசு வழங்கியது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.