×

குண்டாடா கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரக் கோரி விளையாட்டு வீரர் கலெக்டரிடம் மனு

 

ஊட்டி,பிப்.13: குன்னூர் அருகேயுள்ள குண்டாடா கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி கேலோ இந்தியா பாரா விளையாட்டு வீர் கலெக்டரிடம் மனு அளித்தார். குன்னூர் அருகேயுள்ள குண்டாடா கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையில் சுமார் 250 மீட்டர் மட்டும் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலமாக உள்ளதால், இச்சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், இந்த கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், இந்த கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பர் 2023-24ம் ஆண்டிற்கான கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டியில் பளு தூக்கும் போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மாற்றுத் திறனாளியான இவர் தனது கிராமத்திற்கு தான் வைத்துள்ள மூன்று சக்கர வாகனம் மூலம் சென்று வர முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், இந்த கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பல முறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், நேற்று சரவணன் மற்றும் கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.பின், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, நேரில் வந்து சரவணன் மற்றும் பொதுமக்களிடம் மனு பெற்றுச் சென்றார்.

The post குண்டாடா கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரக் கோரி விளையாட்டு வீரர் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Sportsman Collector ,Gundada village ,Ooty ,Tharakori Kelo ,India ,Kundada village ,Coonoor ,Dinakaran ,
× RELATED குன்னூர், ஊட்டியில் குவிந்த சுற்றுலா...