×

தங்கமயில் நிறுவனத்தில் நாளை வசந்த பஞ்சமி சிறப்பு விற்பனை: தங்கத்திற்கும், வைரத்திற்கும் மெகா சலுகை

மதுரை, பிப்.13: தங்கமயில் நிறுவனத்தில் வசந்த பஞ்சமி தினத்தை ஒட்டி சிறப்பு விற்பனை, பெரும் சலுகையுடன் நடக்கிறது. மதுரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தங்கமயில் நிறுவனத்தில், நாளை சிறப்பு விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தங்கமயில் நிறுவன நிர்வாகிகள் கூறும்போது, ‘‘தை அமாவாசைக்குப் பிறகு வரும் பஞ்சமி திதி மிகவும் விசேஷமானது. இதனை வசந்த பஞ்சமி என்று அழைக்கிறோம். இந்நாளில் சரஸ்வதி தேவி அவதரித்த நாள் என்று சொல்லப்படுகிறது. இந்த வருடம் வசந்த பஞ்சமி, நாளை (பிப்.14) கொண்டாடப்படுகிறது. வசந்த பஞ்சமி வட மாநிலங்களில் சிறப்பு பெற்றது. சரஸ்வதி தேவியின் அருள் நிறைந்த இந்நாள், சௌபாக்கியம் நிறைந்த மஞ்சள் மற்றும் மங்களத்தின் மறு உருவமாகிய தங்கம் வாங்க மிக உகந்த நாளாகும். இந்நாளில் முக்கியத்துவமாக, மஞ்சள் நிற ஆடை, பூக்கள், அணிகலன்கள் வாங்கி பகவானுக்கு சமர்ப்பித்து அணிய வாழ்வில் மங்கலம் உண்டாகும்.

இச்சிறப்பு நாளில் தங்கமயில் நிறுவனத்தில் நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. தங்கம் 10 பவுனிற்கு, அரை பவுன் தங்க நாணயம் பரிசு. வைரம் காரட்டிற்கு ஒரு கிராம் முதல் 3 கிராம் வரை தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பத்து கிராம் தங்கத்திற்கும் அரை கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்படுகிறது. இந்த நாளில் தங்க நகை வாங்கும் அனைவருக்கும் சிறப்புப் பூஜை செய்து அனைவருக்கும் சரஸ்வதி படமும் பரிசாக வழங்கப்படுகிறது இச்சலுகை நாளை ஒரு நாள் மட்டுமே’’ என்றனர்.

The post தங்கமயில் நிறுவனத்தில் நாளை வசந்த பஞ்சமி சிறப்பு விற்பனை: தங்கத்திற்கும், வைரத்திற்கும் மெகா சலுகை appeared first on Dinakaran.

Tags : Vasant ,Thangamail ,Madurai ,Vasant Panchami ,Thangamail Company ,
× RELATED களியக்காவிளை – கன்னியாகுமரி...