×

3 மாத ஆண் குழந்தை மாயம் போலீசை அலைய விடும் தாய்

பூந்தமல்லி: சென்னை மதுரவாயல், தனலட்சுமி நகர், 6வது தெருவை சேர்ந்தவர் அஞ்சலை (27), இவருக்கு திருமணமாகி மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று வீட்டில் குழந்தையை தூங்க வைத்து விட்டு குளிக்க சென்ற போது இரண்டு நபர்கள் வீடு வாடகைக்கு உள்ளதா என விசாரிப்பது போல தனது குழந்தையை கடத்தி சென்று விட்டதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாயிடம் விசாரணை மேற்கொண்ட போது தனது உறவினரிடம் குழந்தையை கொடுத்து விட்டதாகவும் பூந்தமல்லியில் வைத்திருப்பதாக கூறினார். இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரித்த போது அந்த முகவரியில் யாரும் இல்லை என தெரியவந்தது. மேலும் விசாரணையில் குழந்தையை பெருங்குடியில் உள்ள குப்பை தொட்டியில் போட்டு விடுமாறு கூறியதாக முன்னுக்கு பின் முரணாக அஞ்சலை பதில் கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குழந்தையை பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் எங்கே வீசினார் என்பதை கண்டறிய அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு போலீசார் பெருங்குடிக்கு சென்று குழந்தையை தீவிரமாக தேடினர். கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்ற குழந்தையை குப்பை தொட்டியில் வீசினாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக குழந்தையை வீசி விட்டு சென்றாரா குழந்தையை என்ன செய்தார், குழந்தை உயிருடன் இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசி விட்டதாகவும், காணவில்லை என தாயே அளித்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post 3 மாத ஆண் குழந்தை மாயம் போலீசை அலைய விடும் தாய் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Poontamalli ,Anjalai ,6th Street, Thanalakshmi Nagar, Maduravayal, Chennai ,
× RELATED மக்களவை தேர்தலில் வெற்றிமுகம் கண்ட...