×

தொழிலாளிக்கு சரமாரி வெட்டு

பெரம்பூர்: புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (34). இவர் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு கணேஷ் பைக்கில் புறப்பட்டுள்ளார். இரவு 10 மணியளவில் கே.பி. பார்க் வழியாக சென்றபோது அடையாளம் தெரியாத 3 பேர் குடிபோதையில் கணேஷிடம் வீண் தகராறு செய்துள்ளனர். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் கணேஷை சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கணேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

The post தொழிலாளிக்கு சரமாரி வெட்டு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Tamarindo KP ,Ganesh ,Park ,Perumbakkam ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது