×
Saravana Stores

ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய பாஜ அரசை வலியுறுத்தி எஸ்ஆர்இஎஸ் ரயில்வே தொழிற்சங்கம் சார்பில், நேற்று பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனை முன்பு உதவி கோட்ட செயலாளர் தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேற்று மதியம் பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் முன்பு நிர்வாக பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்ஆர்இஎஸ் தொழிற்சங்கத்தின் நிர்வாக தலைவர் சூரியபிரகாஷ், மண்டல பொருளாளர் பார்த்திபன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

The post ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Perambur ,SRES Railway Union ,Perambur Loco Works ,
× RELATED மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும்...