×

ரேபரேலியில் களமிறங்கும் பிரியங்கா மாநிலங்களவை எம்பியாகிறார் சோனியா

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. நாடு முழுவதும் காலியாக உள்ள 56 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டிய எம்பிகள் குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே வீட்டில் நேற்று ஆலோசனை நடந்தது.

இந்த கூட்டத்தில் உபி மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதி எம்பியும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியாகாந்தியை இந்த முறை மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் காங்கிரஸ் அஜய் மாக்கனும் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி நிறுத்தப்படுவார்என்று தகவல் வெளியாகி உள்ளன.

The post ரேபரேலியில் களமிறங்கும் பிரியங்கா மாநிலங்களவை எம்பியாகிறார் சோனியா appeared first on Dinakaran.

Tags : Priyanka ,Rae Bareli ,Rajya Sabha ,Sonia ,New Delhi ,Former ,Congress ,President ,Sonia Gandhi ,
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்