×

‘கெட்அவுட் ரவி’ ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்

சென்னை: எக்ஸ் தளத்தில் ‘கெட்அவுட் ரவி’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். பின்னர் சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை படித்து முடித்தார். பின்னர் நாட்டு பண் பாடுவதற்கு முன்பாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.  ஆளுநர் ரவியின் இச் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது எக்ஸ் தளத்தில் #Getout Ravi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

The post ‘கெட்அவுட் ரவி’ ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Governor ,R. N. Ravi ,Speaker ,Dad ,Dinakaran ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...