×

படூர் ஊராட்சியில் ரூ.3.27 கோடியில் புதிய சாலை: எம்எல்ஏ அடிக்கல்

திருப்போரூர்: படூர் ஊராட்சியில் ரூ.3.27 கோடி மதிப்பில், புதிய சாலை பணிகளுக்கு எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். திருப்போரூர் ஒன்றியம் படூர் ஊராட்சியில் 21 தெரு சாலைகளுக்கு, புதிய சாலை அமைத்து தர சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என கோரி ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, வேம்புலி அம்மன் கோயில் தெரு, பெரியார் தெரு, கம்பர் தெரு, வள்ளலார் தெரு, பாரதிதாசன் தெரு, காந்தி தெரு, எம்ஜிஆர் தெரு உள்ளிட்ட 21 தெருக்களுக்கு புதிய சாலை அமைக்க உள்ளூர் திட்டக்குழும நிதியில் இருந்து ரூ.3 கோடியே 27 லட்சத்து 23 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன் தலைமை தாங்கினார். படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி கலந்துகொண்டு புதிய சாலைப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணைத்தலைவர் வனிதா சேட்டு, ஒன்றியக்குழு உறுப்பினர் நந்தினி பஞ்சா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

The post படூர் ஊராட்சியில் ரூ.3.27 கோடியில் புதிய சாலை: எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Badur panchayat ,MLA Adikkal ,Tirupporur ,MLA ,Tiruporur Union Panchayat ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து