×

அறிவுசார் நகரம் அமைப்பதை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்: பெரியபாளையம் அருகே பரபரப்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே அறிவுசார் நகரம் அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம், கல்பட்டு, ஆவாஜிபேட்டை, எர்ணாங்குப்பம், மேல்மாளிகைப்பட்டு போன்ற பகுதிகளில், சுமார் 1703 ஏக்கர் பரப்பளவில் அறிவுசார் நகரம் திட்டம் கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையொட்டி கடந்த வருடம் அக்டோபர் மாதம் அதிகாரிகள் அளவீடு செய்ய சென்றனர். அவர்களை தடுத்தி நிறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் பாமக சார்பில் நவம்பர் மாதம் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் செய்து தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று மேல்மாளிகைப்பட்டு கிராமத்தில் அறிவுசார் நகரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்ட வீடுகள், கோயில், சர்ச் போன்ற கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர். இதனால் அக்கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலை தொடர்ந்தால் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் கூறினர்.

The post அறிவுசார் நகரம் அமைப்பதை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்: பெரியபாளையம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Oothukottai ,Ellapuram ,Enambakkam ,Kalpattu ,Avajipettai ,Ernankuppam ,Melmalikaipatta ,
× RELATED திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு