×

இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கு மார்ச் 1ல் கலந்தாய்வு

சென்னை: இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான கலந்தாய்வு வரும் மார்ச் 1ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலை பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான நேர்முக தேர்வு வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான கலந்தாய்வு மார்ச் 1ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கு மார்ச் 1ல் கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,TNPSC ,Tamil Nadu Public Service Commission ,Gopala Sundararaj ,Tamil Nadu Public Service Commission Tamil Nadu Forensic… ,Dinakaran ,
× RELATED 5,990 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட...