×

மீஞ்சூர் காவல் நிலையத்தில் இலவச மருத்துவ முகாம்

பொன்னேரி: மீஞ்சூர் காவல் நிலையத்தில் தனியார் மருத்துவமனை மூலம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், காவல்துறையினர் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ஆவடி காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையம் மற்றும் புரசைவாக்கம் ஸ்ரீ பாலாஜி மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நேற்றுமுன்தினம் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளி ராஜ் தலைமையில் நடந்தது.

இதில் ஈசிஜி, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, கண் பரிசோதனை பொது பரிசோதனை உள்ளிட்ட வகையான பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் காவல்துறையினர், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் பயன அடைந்தனர். இதில் ஜெக‌ந்நாத‌ன், மக்கள் தொடர்பு அலுவலர், இந்து, தினேஷ்குமார் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post மீஞ்சூர் காவல் நிலையத்தில் இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Free Medical Camp ,Meenjoor Police Station ,Ponneri ,Meenjur police station ,Avadi Police ,Purasaivakkam ,Sri… ,
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்