×

வேலூர் வடக்கு காவல்நிலையம் அருகே ஆபத்தான கால்வாய் சிலாப் சீரமைக்க கோரிக்கை

வேலூர் : வேலூர் வடக்கு காவல்நிலையம் அருகே ஆபத்தான கால்வாய் சிலாப் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாநகரின் மையப்பகுதியான வேலூர்வடக்கு காவல்நிலையம் அண்ணாசாலையில் அமைந்துள்ளது. மிக முக்கியசாலையான இந்த பகுதி 24 மணிநேரமும் போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும். பாதசாரிகள் அதிகளவில் சென்று வரும் பகுதியாக உள்ளது.

இப்படி மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியான வேலூர் வடக்கு காவல்நிலையம் அருகே கால்வாய் சிலாப் கடந்த சில மாதங்களாக உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இரவுநேரங்களில் அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் கால்வாயில் விழுந்து காயங்களுடன் செல்லும் நிலையாக உள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக கால்வாய் சிலாப் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வேலூர் வடக்கு காவல்நிலையம் அருகே ஆபத்தான கால்வாய் சிலாப் சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vellore North Police Station ,Vellore ,Annasalai ,Dinakaran ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...