×

கொலையாளி மனநலம் பாதிக்கப்படவில்லை’: மருத்துவர் வந்தனா தாஸ் கொலை வழக்கில் மனநல பரிசோதனை அறிக்கை வெளியீடு!!

திருவனந்தபுரம்: மருத்துவர் வந்தனா தாஸ் கொலை வழக்கில் கொலையாளிக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட மனநல பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் கேரளாவின் கொல்லம் கொட்டக்காரா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரான வந்தனா தாஸை மருத்துவ பரிசோதனைக்காக போலீசாரால் அழைத்து வரப்பட்ட கைதி சந்தீப் என்பவர் கத்திரிகோலால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தான் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறி சந்தீப் தப்பிக்க முயன்ற நிலையில் அவருக்கு இரண்டு முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் 10 நாட்கள் அனுமதிக்கப்பட்டு சந்தீப்பிற்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் மனநலம் பாதிக்கப்படவில்லை என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனிடையே ஜாமின் கோரி சந்தீப் தாக்கல் செய்த மனுவை கேரளா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இந்த வழக்கில் இருந்து சந்தீப் இனி தப்பிக்க முடியாது என கூறப்படுகிறது. முன்னதாக வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி வந்தனா தாஸின் தந்தை தாக்கல் செய்த மனுவையும் கேரளா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

The post கொலையாளி மனநலம் பாதிக்கப்படவில்லை’: மருத்துவர் வந்தனா தாஸ் கொலை வழக்கில் மனநல பரிசோதனை அறிக்கை வெளியீடு!! appeared first on Dinakaran.

Tags : Doctor ,Vandana Das ,Thiruvananthapuram ,Kollam Kotakara Hospital ,Kerala ,Dinakaran ,
× RELATED நோயாளி இறந்தால் டாக்டருக்கு 5 ஆண்டு...