×

திங்கள்கிழமை அன்று விநாயகரை வழிபட்டால் தொழிலில் வெற்றியின் உச்சத்தை அடையலாம்.. வழிபடும் முறைகள்..!!

ஒவ்வொரு வியாபாரத்தின் வெற்றி என்பதும் பல்வேறு காரணங்களை சார்ந்தது. உங்கள் தொழிலில் சிலவற்றை மட்டும்தான் நீங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும், பலவற்றை கட்டுப்படுத்த இயலாது. ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்த திறமையும், அதிர்ஷ்டமும் கண்டிப்பாக வேண்டும். உங்களுக்கு எவ்வளவுதான் திறமை இருந்தாலும் கடவுளின் அருள் உடனிருப்பது உங்களுக்கு கூடுதல் பலம்தான். கடவுளின் அருளை பெறுவதற்கு சிறந்த வழி அவர்களுக்கு பிடித்த சக்திவாய்ந்த மந்திரங்களையும் கூறி பூஜை செய்து வழிபடுவதுதான். இந்த பதிவில் உங்கள் வியாபாரத்தை வெற்றிகரமானதாக மாற்றும் சக்திவாய்ந்த மந்திரங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ஆஞ்சநேய மந்திரம்
இந்த மந்திரத்தை செவ்வாய் கிழமையில் கூறி வழிபடுவது நல்லது. அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு பூஜையறையையும், ஆஞ்சநேயரின் சிலையையும் சுத்தம் செய்யவும். தட்டில் மஞ்சள், குங்குமம் மற்றும் அரிசி வைத்து ஆஞ்சநேயரை வழிபடவும்.

எப்படி கூற வேண்டும்?
நெய் விளக்கேற்றி வைத்து மனதை ஒருமுகப்படுத்தி ஆஞ்சநேயரை நினைத்து 25 நிமிடம் மந்திரத்தை கூறவும். உங்களின் தொழில் போட்டிகள் எல்லாம் குறைந்து விரைவில் உங்கள் தொழில் நல்ல முன்னேற்றத்தை அடையும். நீங்கள் கூற வேண்டிய மந்திரம் என்னவெனில் ” ஓம் எங் ஹ்ரிங் ஹனுமதே ராமதூதாய லங்காவித்வாஸ்னாய் அஞ்சனி கரம் சம்பூதா ஷகினி டாகினி டாகினி வித்வான்சான்ய கிளிக்கிளி புபுகரேன் விபீஷணாய ஹனுமத்தேவாயா ஓம் ஹ்ரிங் ஷ்ரிங் ஹாங் ஹா பாத் ஸ்வாஹா ”

தொழில் வெற்றிக்கான பிள்ளையார் மந்திரம்
தடைகளை நீக்கி வளங்களை அள்ளி தருபவர் வினை தீர்க்கும் விநாயகர். விநாயகரை வழிபடுவதற்கு மிகசிறந்த நாள் திங்கள் கிழமை ஆகும். அதுமட்டுமின்றி சங்கடஹர சதுர்த்தியன்று பிள்ளையார் மந்திரங்களை கூறி வழிபடுவதும் வெற்றியையும், செல்வத்தையும் பெற்றுத்தரும்.

எவ்வாறு செய்ய வேண்டும்?
திங்கள் கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு விநாயகரை தயார் பண்ணவும். சிவப்பு நிற துணி மற்றும் பிள்ளையாருக்கு பிடித்த மலர்களை வைத்து ” ஓம் ஷ்ரீம் கம் சவ்பாக்ய கணபதயே வர்வார்த்த சர்வஜன்ம மெய்ன் வஷாமன்ய நமஹ ” என்ற மந்திரத்தை 108 முறை கூறவும். விநாயகருக்கு தேங்காய் படைத்து பூஜையின் இறுதியில் அதில் சிறுபகுதியை பிரசாதமாக எடுத்துக்கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை பார்க்கலாம்.

The post திங்கள்கிழமை அன்று விநாயகரை வழிபட்டால் தொழிலில் வெற்றியின் உச்சத்தை அடையலாம்.. வழிபடும் முறைகள்..!! appeared first on Dinakaran.

Tags : Lord Ganesha ,
× RELATED விநாயகரை வழிபடும் போது மறக்கக்கூடாதவை..!!