×

நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

 

நாகப்பட்டினம்,பிப்.12: நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய சட்டசபை தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நாகப்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அமிர்த ராஜா தலைமை வகித்தார். பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் கணிவண்ணன் பேசினார். விவசாயிகள், மீனவர்கள் ஆகியோர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பெற்ற கடன்களை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

சுற்றுலா தளங்கள் அதிகம் நிறைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் ஒன்றிய, நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முதல் கட்டமாக நாகப்பட்டினம் காடம்பாடி தொடங்கி நாகூர் தேரடி வரை ரூ.3 கோடியே 50 லட்சம் வரையிலும், இரண்டாம் கட்டமாக நாகப்பட்டினம் காடம்பாடி தொடங்கி நாகப்பட்டினம் கோட்டைவாசல் வரை ரூ.3 கோடியே 50 லட்சம் வரை போடப்படவுள்ளது.

 

The post நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam Parliamentary ,Congress Party ,Nagapattinam ,Kilvellur ,Vedaranyam ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர்...