×

அரசு அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு

சென்னை:அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க அகில இந்திய தலைவர் கே.கணேசன், மாநில தலைவர் எஸ்.மதுரம் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: வரும் 15ம் தேதி நடைபெறவுள்ள ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் 26ம் தேதி அன்று நடைபெறவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் 2 லட்சத்து 44 ஆயிரம் அலுவலக உதவியாளர்கள், இரவுக்காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், பண்ணை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், ஊராட்சி நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்கள் தூய்மை பணியாளர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், பொது நூலகத்துறை, கல்வித்துறை போன்ற அனைத்து துப்புரவு பணியாளர்கள் பங்கேற்பார்கள் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government Office Assistants and ,Basic Employees Association ,All India ,President ,K. Ganesan ,State ,S. Maduram ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...