×

குரூப் 2 பதவி நேர்முக தேர்வு இன்று முதல் தொடக்கம்

சென்னை: குரூப் 2 பதவிக்கான நேர்முக தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவியில் (நேர்முக தேர்வு பதவி) 116 காலி பணியிடத்துக்கும், குரூப்-2ஏ பதவியில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) 5,990 இடங்கள் என 6,151 காலி பணியிங்களுக்கான தேர்வை நடத்தியது. இப்பதவிகளுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் கடந்த மாதம் 11ம் தேதி வெளியிடப்பட்டது.

இதில் குரூப் 2 பதவியில் அடங்கிய பதவிகளில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் அத்தேர்வுக்காக வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 327 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை முதல் நடக்கிறது. இந்த நேர்முக தேர்வு தொடர்ந்து 17ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு வருகிற 21ம் தேதி இவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

The post குரூப் 2 பதவி நேர்முக தேர்வு இன்று முதல் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Public Service Commission ,TNPSC ,
× RELATED 5,990 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட...