×

பாஜ எம்.பி சீட் கேட்டவர் கொடூரக்ெகாலை: தாய், மகள் உட்பட 7 பேர் கைது

திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சிங்கோட்டம் பகுதியை சேர்ந்தவர் புட்டா ராமு(36). பாஜ பிரமுகரான இவர் ஐதராபாத்தில் ரியல் எஸ்டேட் நடத்தி வந்தார். மேலும் அப்துல்கலாம் அறக்கட்டளை என்ற பெயரில் சமூகசேவை செய்து வந்தார். நடைபெற உள்ள எம்பி தேர்தலில் போட்டியிட பாஜ கட்சி தலைமையிடம் மனு அளித்திருந்தார். இந்நிலையில் இவர் கடந்த 7ம் தேதி ஐதராபாத் நிஜாம்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ரவுலபாலம் பகுதியை சேர்ந்த பெண் ஹிமாம்பி (40) மற்றும் அவரது மகள் நசீமா(19) ஆகியோர், ரவுடி கும்பலுடன் சேர்ந்து புட்டா ராமுவை கொடூரமாக கொன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக ஹிமாம்பி, நசீமா, மணிகண்டா, வினோத், முகமதுகைசர், பண்டாசிவா, கபாலா நிகில் ஆகிய 7 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதுபற்றிய விவரம்: கணவரை பிரிந்த ஹிமாம்பி தனது மகள் நசீமாவுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் யூசுப்குடாவில் உள்ள ஒரு போலீஸ்காரரின் வீட்டில் வாடகைக்கு குடியேறினார். சில நாட்களுக்கு பிறகு ஹிமாம்பிக்கும் போலீஸ்காரருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஹிமாம்பி வாடகைக்கு குடியிருந்த வீட்டை அவரது பெயருக்கே போலீஸ்காரர் பத்திரப்பதிவு செய்து கொடுத்துவிட்டாராம். பின்னர் பாஜ பிரமுகர் ராமுவுடன் ஹிமாம்பிக்கு பழக்கம் ஏற்பட்டது.

ராமு ரியல் எஸ்டேட் மட்டுமின்றி, சூதாட்டமும் நடத்தியுள்ளார். இந்நிலையில் ஹிமாம்பியின் மகள் நசீமாவை அடைய ராமு திட்டமிட்டுள்ளார். இதற்கு ஹிமாம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் இதை கண்டுகொள்ளாத ராமு, நசீமாவை அடைய பலமுறை முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹிமாம்பி, ராமுவை கொல்ல முடிவு செய்தார். அப்போது ராமுவின் சூதாட்ட நண்பர்களான மணிகண்டா(30), வினோத்(20) ஆகியோர் ஹிமாம்பிக்கு அறிமுகமாகினர். இதற்கிடையில் நசீமாவுடன் வினோத்துக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனால் அவர்கள் 4 பேரும் ராமுவை கொல்ல திட்டமிட்டனர். அதன்படி கடந்த 7ம்தேதி நசீமா போன் செய்து ராமுவை அழைத்துள்ளார். விரைந்து வந்த ராமுவை ஹிமாம்பி, மணிகண்டா, வினோத் மற்றும் ஜிலானி உள்பட 11 பேர் ராமுவை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதையடுத்து போலீசார், ராமுவின் செல்போனில் இருந்த அழைப்புகளை ஆய்வு ெசய்தபோது, நசீமா கடைசியாக பேசியது தெரியவந்தது. அதனை கொண்டு விசாரித்தபோது 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

The post பாஜ எம்.பி சீட் கேட்டவர் கொடூரக்ெகாலை: தாய், மகள் உட்பட 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Tirumala ,Putta Ramu ,Singotam ,Kurnool district ,Andhra Pradesh ,Hyderabad ,Abdul Kalam Foundation ,
× RELATED மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...