×

விசாரணை நீதிமன்றங்களை கீழ் கோர்ட் என்று குறிப்பிடக் கூடாது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புதுடெல்லி: விசாரணை நீதிமன்றங்களை கீழ் கோர்ட் என்று குறிப்பிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உ.பி.யில் கடந்த 1981ல் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இருவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அபேய் ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு, ஆவணங்களில் கீழ் கோர்ட் என்று உச்ச நீதிமன்ற பதிவாளர் குறிப்பிட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதுபற்றி குறிப்பிட்ட அவர்கள், விசாரணை நீதிமன்றத்தை கீழ்கோர்ட் என்று பதிவாளர் குறிப்பிடக் கூடாது. நீதிமன்ற ஆவணங்களில், இனி கீழ் கோர்ட் ஆவணம் என்ற வார்த்தை இடம் பெறக் கூடாது. விசாரணை நீதிமன்ற ஆவணம் என்றுதான் இருக்கவேண்டும். இதை பதிவாளர் இனி மேல் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை விசாரணை நீதிமன்றத்தில் இருந்து பெற்று வரும் ஆகஸ்ட் 6ம் தேதி விசாரணையின்போது சமர்ப்பிக்க உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

 

The post விசாரணை நீதிமன்றங்களை கீழ் கோர்ட் என்று குறிப்பிடக் கூடாது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,UP ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டில் மருத்துவம் படித்தாலும் உதவித்தொகை: உச்ச நீதிமன்றம் உத்தரவு