×

வாக்கு சேகரிப்பில் இது புது ரகம் எனக்கு ஓட்டு போடலைன்னா வீட்ல 2 நாளுக்கு சாப்பிடாதீங்க: மாணவர்களுக்கு சிவசேனா எம்எல்ஏ அறிவுரை

மும்பை: உங்க அம்மா, அப்பா எனக்கு ஓட்டு போடலைன்னா வீட்ல 2 நாளுக்கு சாப்பிடாதீங்க என்று மாணவர்களிடம் சிவசேனா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல்னு வந்துவிட்டாலே ஓட்டு சேகரிப்பதற்கு அரசியல்வாதிகள் புதுசு புதுசா ஐடியா வைச்சிருக்காங்க. இதிலும், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா எம்எல்ஏ ரொம்ப வித்தியாசமா யோசிச்சியிருக்காரு. அவரது பெயர் சந்தோஷ் பங்கர். கலாம்நூரி தொகுதி எம்எல்ஏ. இவர், அண்மையில், ஹிங்கோலி மாவட்டத்தில் ஜில்லா பரிசத் பள்ளிக்கு கெத்தா போயிருக்காரு. வகுப்பறைகளை பார்வையிட்ட அவர் பள்ளிக்கூடம்னு கூட பார்க்காமல் தன்னுடைய பிரசாரத்தை துவங்கிட்டாரு.

5ம் வகுப்பு மாணவர்களிடம், இங்க பாருங்க வீட்டுக்கு போனதும், சந்தோஷ் பங்கருக்குதான் ஓட்டு போடனும்முனு உங்க, அப்பா, அம்மாகிட்ட சொல்லுங்க. அப்படி அவங்க ஓட்டு போட முடியாதுன்னு சொன்னா, 2 நாளைக்கு சாப்பிடாம சத்தியாகிரகம் பண்ணுங்க. சந்தோஷ் பங்கர் அங்கிளுக்கு ஓட்டு போட்டாதான் சாப்பிடுவேன்னு சொல்லுங்க என்று கூறியுள்ளார். அதோடு, தான் சொன்னதையே மாணவர்களை திரும்பச் சொல்லச் சொல்லி புளகாங்கிதம் அடைஞ்சிருக்காரு. கூடவே வந்த கட்சிக்காரர்கள் இத அப்படியே வீடியோ பிடுச்சு பரப்ப, அது அந்த பகுதியில் வைரலாகிடுச்சு. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பவார் கட்சிக்காரங்க உஷாராகி அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விட்டிருங்காங்க.

 

The post வாக்கு சேகரிப்பில் இது புது ரகம் எனக்கு ஓட்டு போடலைன்னா வீட்ல 2 நாளுக்கு சாப்பிடாதீங்க: மாணவர்களுக்கு சிவசேனா எம்எல்ஏ அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Shiv ,Mumbai ,Shiv Sena MLA ,Maharashtra ,Shiv Sena ,
× RELATED ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை களம் இறக்கியது பா.ஜ