அமிர்தசரஸ்: குர்தாஸ்பூர் மக்களவை தொகுதியில் சன்னி தியோலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட உள்ளதால், பாஜக வேட்பாளராக யுவராஜ் சிங் போட்டியிட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், தனது தாயார் ஷப்னத்துடன் சமீபத்தில் ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரியை சந்தித்தார். அதனால் யுவராஜ் சிங் விரைவில் பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக அவர் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த தொகுதியில் ஏற்கனவே பாலிவுட் நடிகர் சன்னி தியோல் எம்பியாக இருக்கிறார். ஆனால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறப்படுவதால், குர்தாஸ்பூர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக யுவராஜ் சிங் போட்டியிட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
The post சன்னி தியோலுக்கு வாய்ப்பு மறுப்பு; பாஜக சார்பில் யுவராஜ் சிங் போட்டி?: பஞ்சாப் அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.