×

தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில் பிரதமராகும் திட்டம் ஏதேனும் உள்ளதா?: நடிகை கங்கனா பளிச் பேட்டி

மும்பை: தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த கங்கனாவிடம், பிரதமராகும் திட்டம் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டதற்கு பளிச் என்று பதிலளித்துள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா அரசியலில் குதிப்பார் என்று கடந்த சில ஆண்டுகளாகவே வதந்திகள் இருந்து வருகிறது. இந்நிலையில் அவர் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர் ஒருவர், ‘உங்களுக்கு எதிர்காலத்தில் பிரதமராகும் திட்டம் ஏதும் உள்ளதா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், ‘எமர்ஜென்சி (அவசரநிலை’ என்ற படத்தில் நடிக்கிறேன். அந்தப் படத்தைப் பார்த்த பிறகு, யாரும் என்னைப் பிரதமராகப் பார்க்க விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன்’ என்றார்.

இந்திய அரசியலில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலையை கொண்டு வந்ததை, எதிர்மறையாக சித்தரிக்கும் வகையில், அந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தன்னை பாஜகவின் ஆதரவாளராக காட்டிக் கொள்ளும் கங்கனா, கடந்த நவம்பரில் அயோத்திக்கு சென்ற போது அளித்த பேட்டியில், ‘கிருஷ்ணரின் ஆசீர்வாதம் இருந்தால், மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன்’ என்று கூறியிருந்தார். அதனால் வரும் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் கங்கனா போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில் பிரதமராகும் திட்டம் ஏதேனும் உள்ளதா?: நடிகை கங்கனா பளிச் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kangana Palich ,MUMBAI ,Kangana ,Bollywood ,Prime ,Dinakaran ,
× RELATED நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த...