×
Saravana Stores

சோலாடா கிராமத்தில் பயனற்று கிடக்கும் சுகாதார வளாகம்

 

ஊட்டி, பிப்.11: ஊட்டி அருகே சோலாடா கிராமத்தில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பயனற்று கிடைக்கிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் உள்ளாட்சி சார்பில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்த சுகாதார வளாகங்கள் சில காலங்கள் மட்டுமே பொதுமக்களுக்கு பயன்பட்டு வந்தது.

தண்ணீர் வசதி மற்றும் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் பெரும்பாலான ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் பயனற்று மூடி கிடக்கிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ஊட்டி அருகே உள்ள சோலாடா கிராமத்திலும் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் இப்பகுதி பெண்கள் தங்களது அவசர தேவைகளுக்கு கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, இப்பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சுகாதார உலகத்தை அரசு மீண்டும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post சோலாடா கிராமத்தில் பயனற்று கிடக்கும் சுகாதார வளாகம் appeared first on Dinakaran.

Tags : Solada ,Ooty ,
× RELATED உருளைக்கிழங்கு பயிர் பராமரிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்