×

(தி.மலை) டிரைவர் தூக்கிட்டு தற்கொலை போலீஸ் விசாரணை கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு தாக்கியதால்

 

ஆரணி, பிப்.11: கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு தாக்கியதால் மனவேதனையில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் ரகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த்(38), கார் டிரைவர். இவரது மனைவி லலிதா (30), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் லலிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மனைவி வேலுமணியிடம் இரண்டு லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், கடனை திருப்பிக் கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால், கடந்த சில வாரங்களாக வேலுமணி பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி லலிதா, அவரது கணவரிடம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். அப்போது இருவரும் பல்வேறு காரணங்களை கூறி பணத்தை திருப்பி தராமல் இருந்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சின்னசாமி விஜயகாந்தின் போனுக்கு தொடர்பு கொண்டு நேரில் வருமாறு அழைத்துள்ளார். இதனை கேட்டு விஜயகாந்தை அங்கு சென்றார்.

அப்போது சின்னசாமி அவரது உறவினர் சக்தி உட்பட 4க்கும் மேற்பட்ட நபர்கள் பணத்தை கேட்டு விஜயகாந்தை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த விஜயகாந்த் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் விஜயகாந்த் வரும் வகையிலே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து விஜயகாந்தின் தாய் ஆரணி தாலுகா போலீசில் நேற்று கொடுத்த புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post (தி.மலை) டிரைவர் தூக்கிட்டு தற்கொலை போலீஸ் விசாரணை கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு தாக்கியதால் appeared first on Dinakaran.

Tags : Th. Malai ,Arani ,Vijayakanth ,Saveur Raghunathapuram ,Thiruvannamalai district ,Lalita ,
× RELATED (தி.மலை) வீட்டிலிருந்து வெளியேறிய...