×

உடல்திறன் தேர்வில் 231 பேர் பங்கேற்பு

 

சேலம், பிப்.11: சேலத்தில் நடந்த இரண்டாம் நிலை காவலர் உடல்திறன் தேர்வில் 231 பேர் பங்கேற்றனர். கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், 100, 400 மீட்டர் ஓட்டத்தில் இளைஞர்கள் திறனை வெளிபடுத்தினர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் காலியாக உள்ள 3,359 இரண்டாம் நிலை காவலர் பணியிடத்ைத நிரப்ப தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 822 இளைஞர்களுக்கு சேலம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் உடல்தகுதி, உடல்திறன் தேர்வு நடத்தப்பட்டது. இந்த 822 இளைஞர்களில் முதல்நாளில் (6ம் தேதி) 420 இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். இவர்களில் 304 இளைஞர்கள் உடல்தகுதி தேர்வில் பங்கேற்றனர்.

அதில், 53 பேர் தகுதியிழந்து வெளியேற்றப்பட்டனர். 251 பேர் அடுத்தக்கட்டமான உடல்திறன் தேர்வில் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தினர். இரண்டாம் கட்டமாக 402 இளைஞர்கள் உடல்தகுதி தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், 312 பேர் பங்கேற்றனர். 80 பேர் தகுதியின்றி வெளியேற்றப்பட்ட நிலையில், 232 பேர் அடுத்தக்கட்ட தேர்வான உடல்திறன் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். இந்த 232 பேருக்கும் நேற்று (10ம் தேதி) உடல்திறன் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 231 பேர் பங்கேற்றனர். ஒருவர் ஆப்சென்ட் ஆனார். இத்தேர்வில் பங்கேற்ற முன்னாள் ராணுவத்தினர் 10 பேருக்கு குண்டு எறிதல் நடத்தப்பட்டது. பின்னர், 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று ஓடினர். இத்தேர்வு பணியை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, மாவட்ட எஸ்பி அருண்கபிலன் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடல்திறன் தேர்வில் வெளியேற்றம் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் தேர்வாளர்கள் அடுத்தக்கட்டமான மருத்துவ பரிசோதனைக்கு தகுதி பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post உடல்திறன் தேர்வில் 231 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Second Level Constable Fitness Test ,Tamilnadu Uniformed Staff Examination Board… ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...