×

பழவேற்காடு கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு


பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு கடற்கரை வைரவன் குப்பம் பகுதியில், நேற்று காலை நடை பயணம் சென்ற மீனவர்கள், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக திருப்பாலைவனம் போலீசுக்கும், பொன்னேரி வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

திருப்பாலைவனம் போலீஸ் எஸ்ஐ ஸ்ரீதர், பொறுப்பு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி, போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று, அடையாளம் தெரியாத சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்தவர் யார்? எந்த ஊர் என்ற விவரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பழவேற்காடு கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Palavekadu beach ,Ponneri ,Thiruvallur District ,Palavekadu Beach, Vairavan Kuppam ,Tirupalaivanam Police ,Ponneri Revenue Department ,Thirupalivanam Police SI ,Dinakaran ,
× RELATED பொன்னேரி நகராட்சி சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி