×

அன்று அமித்ஷாவுக்கு ‘நோ’ இன்று மோடிக்கு ‘ஜே’: ஜெயந்த் சவுத்திரிக்கு பா.ஜவின் பரிசுகள்

சரண்சிங்கிற்கு வழங்கிய பாரத ரத்னா விருது உபி அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. ராஷ்ட்ரீய ேலாக் தளம் கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜவை அரவணைக்க தயாராகி விட்டது. அந்த கட்சித் தலைவரும், சரண்சிங் பேரனுமான ஜெயந்த் சவுத்ரியை கடந்த சில ஆண்டுகளாகவே பா.ஜ பக்கம் கொண்டுவர பல முயற்சிகள் நடந்தன. உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின்போது பா.ஜ கூட்டணிக்கு வருமாறு ஜெயந்த் சவுத்திரியை அமித் ஷா நேரடியாக அழைத்தார்.

ஆனால், அமித் ஷாவின் அழைப்பை நிராகரித்தார் ஜெயந்த் சவுத்ரி . ஆனால் நேற்று நாடாளுமன்றத்தில் மோடி புகழ் பாடினார். உபியில் முசாபர்நகர் உட்பட நான்கு தொகுதிகள், ஒன்றிய அமைச்சர் பதவி, உபி மாநில அரசில் இரண்டு அமைச்சர் பதவி என பல ஆபர்களை ஜெயந்த் சவுத்திரிக்கு சந்தோஷத்தில் அள்ளி விட்டு இருக்கிறது பா.ஜ.

 

The post அன்று அமித்ஷாவுக்கு ‘நோ’ இன்று மோடிக்கு ‘ஜே’: ஜெயந்த் சவுத்திரிக்கு பா.ஜவின் பரிசுகள் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Modi ,BJP ,Jayant Chaudhary ,Saransingh ,Rashtriya Yelak Dal ,All India ,Jayant Choudhary ,
× RELATED தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும்...