×

பரனூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி மதசார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: பரனூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி மதசார்பற்ற ஜனநாயக கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி கடந்த 2019ம் ஆண்டே காலாவதியாகிவிட்டதால் இந்த சட்டவிரோத சுங்கச்சாவடியை உடனடியாக மூடக்கோரி நேற்று இடதுசாரி கட்சிகள், மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள், லாரி உரிமையாளர்கள் வணிகர் சங்கங்கள், மனித உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் சார்பில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், பரனூர் சுங்கச்சாவடியை உடனடியாக மூடக்கோரியும் கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் பங்கேற்றன.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தென்னவன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாரதி, அண்ணா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட 500க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். சுங்கச் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால் செங்கல்பட்டு எஸ்பி சாய்பிரனீத் தலைமையில், டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் மேற்பார்வையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

The post பரனூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி மதசார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Paranur toll booth ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டி தேர்தல்...