×

3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2023-24 ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.25%-ஆக அதிகரிப்பு!!

புதுடெல்லி: 2023-24 ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.25%-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்படும் தொகைக்கு கடந்த ஆண்டில் வட்டி விகிதமானது 8.15 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழுவின் 235வது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், 2023-24 ஆண்டுக்கான பி.எப். வட்டியை 0.10 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, பி.எப். வட்டி விகிதம் 8.15 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான உயர்வு ஆகும். இதன் மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்திற்குக் கூடுதல் வட்டி வருமானம் கிடைக்க உள்ளது. இதுகுறித்த பரிந்துரையை நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒப்புதலுக்குப் பிறகு வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்படும். அதன் பிறகே, இபிஎஃப்ஓ அமைப்பு சந்தாதாரர்களின் கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 7 கோடி பேர் பயனடைவார்கள் எனத் தெரிகிறது.

The post 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2023-24 ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.25%-ஆக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...