×

தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பு குறித்து விவாதிக்க திமுக எம்.பி. நோட்டீஸ்

டெல்லி: தமிழ்நாட்டின் மழை, வெள்ள பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று வெள்ள பாதிப்பு பற்றி விவாதிக்க வேண்டும். தமிழகத்துக்கான வெள்ள பாதிப்பு நிவாரணத்தை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் திமுக நோட்டீஸ் அளித்துள்ளது.

The post தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பு குறித்து விவாதிக்க திமுக எம்.பி. நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Dimuka M. B. ,Delhi ,Dimuka M. B. Trichy Shiva ,Tamil Nadu ,
× RELATED மகளிர் உரிமைத் தொகையால் 1.15 கோடி பெண்கள் பயன்: கனிமொழி