×

ஒன்றிய நிதி அமைச்சர் தமிழராக இருந்தும் தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளார் : திமுக எம்.பி. சண்முகம் ஆவேசம்

டெல்லி : தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்று திமுக எம்.பி. சண்முகம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் உரை நிகழ்த்திய திமுக எம்.பி. சண்முகம்,”தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது. ஒன்றிய நிதி அமைச்சர் தமிழராக இருந்தும் தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளார். தமிழ்நாட்டுக்கான இயற்கை பேரிடர் நிதியை உடனடியாக வழங்க வேண்டும். 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் பணி நாட்களை உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரை பகுதியில் ரயில் போக்குவரத்தை கொண்டு வர வேண்டும்.

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.பிஎஸ்என்எல் நிறுவனத்தை முடக்கும் விதமாக டாடா நிறுவனத்துக்கு புதிய சேட்டிலைட் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை ஏன் ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான நிதியை ஒன்றிய அரச உடனே வழங்க வேண்டும். தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே பாலம் அமைக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ஒன்றிய நிதி அமைச்சர் தமிழராக இருந்தும் தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளார் : திமுக எம்.பி. சண்முகம் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : EU ,Finance Minister ,Tamil Nadu ,Dimuka M. B. Sannmugam ,Delhi ,Dimuka M. B. Sanmugham ,Budget ,Dimuka M. B. SANMUGAM ,EU GOVERNMENT ,Union ,
× RELATED தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில்...