×

ஆம்பூர் அருகே நடந்த எருது விடும் விழாவில் பார்வையாளரை பந்தாடிய காளை

*முதலிடம் பிடித்த காளைக்கு ரூ.1 லட்சம் பரிசு

வாணியம்பாடி : ஆம்பூர் அருகே நடைபெற்ற எருதுவிடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. இதில் ஒரு காளை பார்வையாளரை பந்தாடியது. முதல் இடம் பிடித்த காளையின் உரிமையாளருக்கு ₹1லட்சம் பரிசு வழங்கப்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி தலைமை தாங்கினார். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா சிறப்பு அழைப்பாளராக கலந்து விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலம் குப்பம் ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின.
அப்போது திரண்டிருந்த பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். அப்போது ஒரு காளை திடீரென பார்வையாளர்கள் மத்தியில் புகுந்தது. அப்போது அங்கிருந்த ஒருவரை தூக்கி வீசி பந்தாடிவிட்டு ெசன்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விழாவில் குறைந்த வினாடியில் குறிப்பிட்ட இலக்கை அடைந்த காளை உரிமையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், 2ம் பரிசு ரூ.85 ஆயிரம், 3ம் பரிசு ரூ.75 ஆயிரம் என மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு விழாவை கண்டு ரசித்தனர்.நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பூசாரியூர் பகுதயில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது.

இதில் நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இப்போட்டியில் பங்கேற்ற காளைகள் அனைத்தும் கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டது. இதில் குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் ஓடி கடந்த களைக்கு முதல் பரிசு உட்பட 50 காளைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான இளைஞர்கள் பங்கேற்றனர்.

The post ஆம்பூர் அருகே நடந்த எருது விடும் விழாவில் பார்வையாளரை பந்தாடிய காளை appeared first on Dinakaran.

Tags : Ambur ,Vaniyampadi ,Bulls ,slaughtering ,Tirupattur district ,bull slaughtering ,Ampur ,
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி