×

ஈரோடு- கரூர் ரயில் பாதை பராமரிப்பு: ரயில் சேவைகளில் இன்று மாற்றம்

 

ஈரோடு, பிப். 9: ஈரோடு- கரூர் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ஈரோடு-செங்கோட்டை மற்றும் பாலக்காடு டவுன்- திருச்சி பயணிகள் சேவை இன்று (9ம் தேதி) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு-கரூர் ரயில் பாதையில் பாசூர்-ஊஞ்சலூர் இடையே பொறியியல் மற்றும் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இன்று 9ம் தேதி இரண்டு பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு-செங்கோட்டை பயணிகள் ரயில் 2.45 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை- ஈரோடு பயணிகள் ரயில் கரூர் வரை மட்டும் இயக்கப்படும். கரூரிலிருந்து ஈரோடு வரை இந்த ரயில் ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு டவுன்-திருச்சி பயணிகள் ரயில் ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும். ஈரோட்டில் இருந்து திருச்சி வரை இந்த ரயில் ரத்து செய்யப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

The post ஈரோடு- கரூர் ரயில் பாதை பராமரிப்பு: ரயில் சேவைகளில் இன்று மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Erode-Karur ,Erode ,-Sengottai ,Palakkad Town ,Tiruchi ,Erode- ,Karur ,Salem Division Railway Administration ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் குறைந்த கட்டணத்தில் உடனடி...