×
Saravana Stores

சாலையில் ஜல்லி கற்கள்: அகற்றி சீர்செய்த போலீஸ்

ஈரோடு: காளைமாட்டு சிலை அருகே இரவு நேரத்தில் சாலையில் கொட்டிய ஜல்லி கற்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. துடைப்பம், மண்வெட்டியை கொண்டு சாலையை சுத்தம் செய்து போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர். ஈரோடு ரயில்வே நுழைவு பாலத்தில் நேற்றிரவு சென்ற லாரியின் பின்பக்க கதவு திறந்து ஜல்லி கற்கள் கொட்டின. சாலையில் ஜல்லி கற்கள் பெருமளவு கொட்டியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார், இளைஞர்கள் உதவியுடன் ஜல்லி கற்களை அப்புறப்படுத்தினர்.

The post சாலையில் ஜல்லி கற்கள்: அகற்றி சீர்செய்த போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Railway ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் மர்ம விலங்கு தாக்கி 9 ஆடுகள் உயிரிழப்பு