×

அமராவதி பிரதான கால்வாயில் உடைப்பு சரி செய்யும் பணிகள் தீவிரம்

 

உடுமலை, பிப்.9: அமராவதி பிரதான கால்வாயில் உடைப்பு சரி செய்யும் பணி நடக்கிறது. உடுமலை அருகே அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாய் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் பாசனத்துக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பிரதான கால்வாயில் சமீபத்தில்தான் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில், அணையில் இருந்து 10-வது கிமீ தூரத்தில் சாமராயபட்டி என்ற இடத்தில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறி, அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்தது. தகவல் கிடைத்ததும், உடனடியாக கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து, கால்வாயை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகளை உடனடியாக முடித்து பாசனத்துக்கு மீண்டும் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அமராவதி பிரதான கால்வாயில் உடைப்பு சரி செய்யும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Amaravati ,Udumalai ,Tirupur ,Karur ,Amaravati Dam ,Dinakaran ,
× RELATED அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாயில் உபரிநீர் திறப்பு