×

நுண்ணறிவு பிரிவில் 5 எஸ்எஸ்ஐ மாற்றம்

சேலம், பிப்.9: சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவில் 5 சிறப்பு எஸ்ஐக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சேலம் மாநகர காவல்துறையில் ஆட்டையாம்பட்டி, காரிப்பட்டி காவல்நிலையங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதால், நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்ஐக்கள், ஏட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, பள்ளப்பட்டி சிறப்பு எஸ்ஐ முத்துசாமி அன்னதானப்பட்டிக்கும், அங்கு பணியாற்றிய சிறப்பு எஸ்ஐ கார்த்தி ஆட்டையாம்பட்டிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுபோக சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்த 3 பேர் நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றப்பட்டு, காவல்நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, டவுன் சிறப்பு எஸ்ஐ செந்தில்குமார் சேலம் நீதிமன்றம், மத்திய சிறைக்கு நுண்ணறிவு பிரிவு சிறப்பு எஸ்ஐயாகவும், கொண்டலாம்பட்டி சிறப்பு எஸ்ஐ அன்பழகன், பள்ளப்பட்டி ஸ்டேஷன் நுண்ணறிவு பிரிவு சிறப்பு எஸ்ஐயாகவும், கருப்பூர் ஏட்டு காவேரி காரிப்பட்டி நுண்ணறிவு பிரிவு ஏட்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி பிறப்பித்துள்ளார்.

The post நுண்ணறிவு பிரிவில் 5 எஸ்எஸ்ஐ மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Intelligence ,Salem ,Salem Municipal Intelligence Unit ,Attaiyampatti ,Garipatti ,Salem Metropolitan Police ,Intelligence Division ,Pallapatti… ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 3வது இடத்துக்கு...