×

கல்லூரி ஊழியரிடம் வழிப்பறி ; மேலும் ஒருவர் கைது

சேந்தமங்கலம், பிப்.9: புதுச்சத்திரம் அடுத்த திருமலைப்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ்(35). தனியார் கல்லூரியில் வேலை செய்து வரும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேந்தமங்கலத்தில் இருந்து திருமலைப்பட்டிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது துத்திகுளம் சின்னகுளம் அருகே சென்றபோது, 3மர்ம நபர்கள் வழிமறித்து கனகராஜிடம் இருந்த தங்க சங்கிலி, மோதிரம், ₹50ஆயிரத்தை வழிப்பறி செய்தனர். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட சேந்தமங்கலம் வெட்டுக்காடு பகுதியை சேர்ந்த சரத், விக்னேஷ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த பேளுக்குறிச்சி அடுத்த கல்குறிச்சி பகுதியை சேர்ந்த ப்ரோ செங்கோடன்(24) என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

The post கல்லூரி ஊழியரிடம் வழிப்பறி ; மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Kanagaraj ,Thirumalaipatti ,Puduchattaram ,Tuthikulam ,Chinnakulam ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை