×

இன்னும் 14 மாதங்களில் 30 செயற்கை கோள்களை விண்ணில் ஏவுகிறது இன் ஸ்பேஸ்

புதுடெல்லி: இந்திய விண்வெளி மேம்பாட்டு நிறுவனமான இன் ஸ்பேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிதியாண்டின் கடைசியிலும் அடுத்த நிதியாண்டிலும் ஸ்கைரூட் மற்றும் அக்னிகுல் ஆகிய தனியார் நிறுவனங்களின் செயற்கைகோள்கள் உள்பட 30 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும். சென்னையை தலைமை இடமாக கொண்ட அக்னிகுல் காஸ்மோஸ், நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் தனது முதல் 3-டி அச்சிடப்பட்ட ராக்கெட் அக்னிபான்-எஸ்ஓஆர்டிஇடியை விண்ணில் செலுத்துகிறது. வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் தொடர்புடைய வானிலை ஆய்வு சேவைகளை அதிகரிக்க, இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த ஜிஎஸ்எல்வி-எப்14 இந்த நிதியாண்டில் ஏவப்படும். துருவ்ஸ்பேஸ், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா போன்ற சில ஸ்டார்ட் அப்களும், ஐஐடி-சென்னை மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் சிவி ராமன் குளோபல் பல்கலைகழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் செயற்கைகோள்களும் அடுத்த நிதியாண்டில் ஏவப்பட உள்ளன. 14 மாதங்களில் மொத்தம் 30 செயற்கை கோள்கள் ஏவப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இன்னும் 14 மாதங்களில் 30 செயற்கை கோள்களை விண்ணில் ஏவுகிறது இன் ஸ்பேஸ் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,InSpace ,Skyroot ,Agnicool ,Chennai ,
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...