×

பாஜக அரசின் 10 ஆண்டு கால அவலங்கள் குறித்து கருப்பு அறிக்கை வெளியிடப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி: பா.ஜ.க. அரசின் 10 ஆண்டு கால அவலங்கள் குறித்து கருப்பு அறிக்கை வெளியிடப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. 2014-க்கு முன்னர் நடந்த காங்கிரஸ் ஆட்சி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளதாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரம் பின்தங்கி இருந்ததாக குற்றம் சாட்டி பா.ஜ.க. அரசு வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதாரம் முன்னேறி உள்ளதாக பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி நரேந்திர அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கை வெளியிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அறிவித்த நிலையில் பதிலடியாக காங்கிரஸ் கருப்பு அறிக்கை வெளியிடுகிறது. 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி குறித்த கருப்பு அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட உள்ளார்.

The post பாஜக அரசின் 10 ஆண்டு கால அவலங்கள் குறித்து கருப்பு அறிக்கை வெளியிடப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Delhi ,Pa. ,J. K. ,Congress ,EU ,J. ,K. ,BJP government ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...