×

குடி போதையில் தாயை தாக்கிய மகன் கைது

திருச்சி, பிப்.8: திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவைச் சேர்ந்தவர் தேசிங்குராஜா. இவரது மனைவி சந்தானம் (54). இவர்களது மகன் மணிகண்டன் (36). துப்புரவு தொழில் செய்து வருகின்றனர். மது அருந்தும் பழக்கம் உடைய மணிகண்டன் கடந்த 6ம் தேதி மது குடித்துவிட்டு வந்து தனது தாயிடம் மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சந்தானம் கோட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

The post குடி போதையில் தாயை தாக்கிய மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Desinguraja ,Chintamani Pusari Street, Trichy ,Santhanam ,Manikandan ,
× RELATED திருச்சியில் போலி மது பாட்டில்கள் பறிமுதல்..!!